Thursday, April 14, 2005

உங்களுக்கு சில செய்திகள்! - Madam JJ, Vishwanathan Anand & Energizer

உங்களுக்கு சில செய்திகள்!

1. அரசியல்: ஜெ'யின் எள்ளல்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டசபைத் தலைவர் திரு.GK மணி, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதன் அவசியத்தை சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தியபோது, தமிழக முதல்வர் முன் வைத்த மறுமொழி சுவாரசியமாக இருந்தது! ஆனால், PMK-க்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது!!!

தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு தலைமையேற்றிருக்கும் PMK, முதலில் அதன் தலைவரின் மகனும் மத்திய அமைச்சருமான Dr.அன்புமணிக்கு (இவர் பெரும்பாலும் 3 பீஸ் சூட் உடையில் வலம் வருபவர்!) தமிழ் கலாச்சாரப்படி உடை அணிவதை அறிவுறுத்துமாறு முதல்வர் கேட்டுக் கொண்டது சூப்பரோ சூப்பர்!!!

அதே நேரத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, உடை அணியும் விஷயத்தில், முதல்வர் மனம் விட்டு பாராட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! முதல்வர் மொழியும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்தவை என்றும் ( உடை விஷயம் வேறு, மொழி விஷயம் வேறு என்று விதண்டாவாதம் செய்த!) திரு.G.K.மணிக்கு எடுத்துரைத்தார்!

இதற்குப் பேர் தான் பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்காய் மாறிய கதை என்பதோ?

2. விளையாட்டு: ஆனந்துக்கு செஸ் ஆஸ்கார் விருது!

தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த், தொடர்ந்து இரண்டாவது வருடமும் (மொத்தம் நான்கு முறை!) செஸ் ஆஸ்கார் விருதை வென்றதன் வாயிலாக தான் உலகின் தன்னிகரில்லா முதல் நிலை ஆட்டக்காரர் என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறார். ரஷியர் அல்லாதவரில் இவ்விருதை வென்றவர் ஆனந்த் ஒருவரே என்பதும், இதற்கு முன் 1997, 1998-லும் இதே விருதை அவர் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது! இவ்விருதுக்குரியவரை 64-MAGAZINE என்ற செஸ் பத்திரிகைக்காக 75 நாடுகளிலிருந்து 445 செஸ் விற்பன்னர்கள் (இதில் 74 கிராண்ட் மாஸ்டர்களும் அடங்குவர்!) தேர்வு செய்கின்றனர்!

சென்னையை சேர்ந்த இந்த 'செஸ் புலி' அதிவேக மற்றும் கிளாஸிக்கல் ஆகிய இருவகைப்பட்ட போட்டிகளிலும் பல பட்டங்கள் வென்றவர் என்பது பாராட்டப்பட வேண்டியது. ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் முதலாவதாக வந்த ஆனந்த் 5025 புள்ளிகளும், அடுத்து வந்த கேஸ்பரோவ் 3664 புள்ளிகளும் எடுத்தனர்! இதுவரை வழங்கப்பட்ட 10 செஸ் ஆஸ்கார் விருதுகளில், கேஸ்பரோவ் 5 முறையும், ஆனந்த் 4 முறையும் வென்றுள்ளனர் என்பதை பார்க்கும்போது இவ்விருவரும் கடந்த 9 வருடங்களாக செஸ் உலகை எந்த அளவுக்கு தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதை உணரலாம்!!!

3. Energizer - சாத்தானின் போதைப் பொருள்!

சாத்தானின் போதை மருந்து என்றழைக்கப்படும் Methamphetamine, தற்போது அமெரிக்காவை ஆக்ரமித்து, ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது! மெதம்·பெடமின், குறைந்த விலையில் சுலபமாக தயாரிக்க வல்ல ஒரு வேதியியற் கலவை!

ஐஸ் மற்றும் க்ரிஸ்டல் என்றும் அழைக்கப்படும் மெத் (METH), ஒருவருக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரம், போதை தரும் பெருமகிழ்ச்சியும் (EUPHORIA) சக்தியும் தரவல்லது. அது மனதை ஒருமுகப்படுத்த(!) உதவுவதோடு, இன்ப உணர்வுகளை அற்புதமாக அதிகப்படுத்துவதாகவும், மெத்-ஐ பயன்படுத்துபவர்கள் கூறுகிறார்கள்!!! ஆனால், மெத்-ஐ எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை!

மெத் மூளையின் செயல்பாட்டு வேதியியலை பாதிப்பதால், இதற்கு அடிமையானவர்கள் மனநோயாளிகளாகவும் (PARANOIA!), மூர்க்க குணம் கொண்டவர்களாகவும், குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் புறக்கணிப்பவர்களாகவும் மாறி விடுகிறார்கள். அமெரிக்காவில் மெத் அதிகம் புழங்கும் மாகாணங்கள், Missouri, Iowa, Illinois, Indiana, Arkansas ஆகியவை.

மெத் போதைப் பழக்கத்தை உதறித் தள்ளிய அமெரிக்கர் ஒருவர், வேறெந்த போதைப் பொருளும் தராத "உயருணர்வை" (unique HIGH!) மெத் வழங்கியதாகக் குறிப்பிடுகிறார்! அவர் மேலும் கூறுகிறார் (இந்திய அரசாங்க குறும்படப் பாணியில்!), "மெத் அற்புதமானது! அது வேலை செய்யத் தொடங்கியவுடன் நீங்கள் மிகுந்த புத்திசாலியாகவும், சக்திசாலியாகவும் உணர்வீர்கள்! மெத் ஒன்றே உங்கள் வாழ்வின் முதலும் முக்கியமும் ஆன விஷயமாகக் கருதும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்! ஏனெனில், மெத் தரும் ஜாலி அலாதியானது!!!"

இவர் சொல்றதைக் கேட்டா, TRY பண்ணிப் பாக்கலாம் போல இருக்கே ;-))

என்றென்றும் அன்புடன்
பாலா

1 மறுமொழிகள்:

-L-L-D-a-s-u said...

//உடை விஷயம் வேறு, மொழி விஷயம் வேறு என்று விதண்டாவாதம் செய்த//

அய்யயோ ..இங்கேயுள்ள அறிவு ஜீவி தாதாக்கள் கோச்சிக்கப்போறாங்க...

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails